தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்திலுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கிவைத்தார்.
ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் இங்குள்ள பரிசல் ஓட்டிகளின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக சிறப்பு முகாம் நடைபெற்றது.