தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தர்மபுரி மக்களின் கோடை தாகத்தைத் தணித்த அமைச்சர்!

தர்மபுரி: கோடைகாலத்தை முன்னிட்டு பொதுமக்களின் குடிநீர் தாகத்தைத் தணிக்கும் வகையில் தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் தண்ணீர் பந்தலை அமைச்சர் கே.பி. அன்பழகன் திறந்துவைத்தார்.

தண்ணீர் பந்தல்  தண்ணீர் பந்தல் திறப்பு விழா  அமைச்சர் கே.பி.அன்பழகன்  அதிமுக தண்ணீர் பந்தல்  ADMK Thaneer Pandhal  Thaneer Pandhals Opening Cermony  MInister KP Anbazhagan
MInister KP Anbazhagan

By

Published : Apr 12, 2021, 9:00 AM IST

தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் தர்மபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நேற்று (ஏப். 11) நடைபெற்றது.

இந்த விழாவில் தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு தண்ணீர்ப் பந்தலைத் திறந்துவைத்தார்.

தண்ணீர்ப் பந்தலைத் திறந்துவைக்கும் அமைச்சர் கே.பி. அன்பழகன்

பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் மோர், குடிநீர், இளநீர், தர்பூசணி வெள்ளரி, பழங்கள், பழ ரசம் உள்ளிட்டவற்றை வழங்கி தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்தத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கரோனா குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை: வருகிறது கடுமையான கட்டுப்பாடுகள்?

ABOUT THE AUTHOR

...view details