தருமபுரி:தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம் ஆண்டு புதிய மற்றும் பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு வாணியாறு நீர்த்தேக்கத் திட்ட வரைவு விதிகளின்படி புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குச் சுழற்சி முறையில், 55 நாள்களுக்கும் நாளொன்றுக்கு 90 கனஅடி வீதம் தண்ணீரை தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் திறந்துவைத்தார்.
திறக்கப்பட்ட நீா் மோளையானூர், வெங்கடசமுத்திரம், தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைகோட்டை, ஜம்மன அள்ளி, வலதுபுறக் கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பழைய ஆயக்கட்டு மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்கள் வசதிபெறுகின்றன.