தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அ.மல்லாபுரத்தில் விவசாயிகளுக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் கடன் உதவி வழங்கும் விழா இன்று (ஆக22) நடைபெற்றது.
இதில், 151 விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் ஒரு கோடியே 14 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கடன் உதவிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டிலேயே அதிகளவில் பகுதிநேர நியாய விலைக் கடைகள் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
2005ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள் அமைப்பது தொடர்பான விதிகளை தளர்த்தி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையிலேயே அதிகளவில் பகுதி நேரக் கடைகள் தொடங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் முழுநேர நியாய விலைக் கடைகள், பகுதிநேர நியாய விலை கடைகள், மகளிர் நடத்தும் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் மாவட்டத்தில் 1062 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேவைப்படும் இடங்களில் நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நியாயவிலை கடைகளுக்கு முன்பு அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க நோக்கிலும், காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நகரும் நியாயவிலைக் கடைகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது”என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'ஆயுஷ் அமைச்சக செயலரின் இந்தி வெறியை தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும்'