தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.5.11 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் - 10 வளர்ச்சி திட்டப் பணிகள்

தர்மபுரி: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.11 கோடி மதிப்பில் சமுதாயக்கூடம், தார் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் பணிகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார்.

தர்மபுரி
தர்மபுரி

By

Published : Feb 7, 2021, 10:36 AM IST

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கும்பார அள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயன அள்ளி, அடிலம் ஆகிய ஐந்து இடங்களில் தலா ரூ.80 லட்சம் வீதம் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பில் ஐந்து சமுதாயக்கூடம் மற்றும் உணவு அறை கட்டப்பட உள்ளது.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சென்ராயன அள்ளி, சொரக்கனூர், கெண்டிகான அள்ளி, முக்குளம், சொன்னம்பட்டி, ஆகிய இடங்களில் ரூ. 1.11 கோடி மதிப்பில் தார்ச்சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்தல் என மொத்தம் ரூ.5.11 கோடி மதிப்பில் 10 வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற உள்ளன.

அமைச்சர் கே.பி.அன்பழகன்

இதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்ட உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய இந்து முன்னணி பிரமுகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details