தர்மபுரியில் அதிமுக வடக்கு, தெற்கு ஒன்றிய அளவிலான கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன், "அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறி, ஆளுநரிடம் திமுகவினர் மனு கொடுக்கிறார்கள். ஊழல் செய்யப்பட்டதிற்காக ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான், நாட்டு மக்கள் அனைவருக்கும் இது தெரியும். இவர்கள் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லை. ஸ்டாலினுக்கு என்றைக்கும் தமிழ்நாட்டை ஆளக்கூடிய திறமை இல்லை.
ஆட்சி ஒருவாரத்தில் கவிழ்ந்துவிடும்; ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும்; மூன்று மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தினர் தெரிவித்தார்கள். நான்கு ஆண்டு காலமாக வெற்றிநடை போட்டுவருகிறது அனைத்து விருதுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பெற்றுள்ளார்.