தருமபுரி அதிமுக சார்பில் கரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் வருவாய் இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கினார். இதில் தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே.பி. அன்பழகன் - மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அன்பழகன்
தருமபுரி: ஊரடங்கு உத்தரவால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் கே.பி. அன்பழகன் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

K P Anbalagan gives essential commodities in dharmapuri