தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய அமைச்சர் - K. P. Anbalagan

எம்ஜிஆா் நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கலை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.

Minister K. P. Anbalagan celebrates pongal
Minister K. P. Anbalagan celebrates pongal

By

Published : Jan 14, 2021, 7:23 PM IST

தருமபுரி: தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு, தன் சொந்த கிராமமான காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் தன் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும், சூாியனுக்கு படையலிட்டும் கொண்டாடினாா்.பின்னர் எம்ஜிஆா் நகரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கலை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details