கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல், நாடார் கொட்டாய், ஊட்டமலை என தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் சூழ்நிலை உள்ளது.
ஒகேனக்கல் பகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆய்வு! - Hogenakkal
தருமபுரி:கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் பகுதியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆய்வு செய்தார்
எனவே உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளிட்டோர் ஊட்டமலை, நாடார் கொட்டாய் பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தனர்.நாடார் கொட்டாய் பகுதியில் உள்ள ஆறு குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அந்த பகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தருமபுரி மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.