தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்! - Dharmapuri Police Station

தருமபுரி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கில் மூன்றாம் இடம் பிடித்த தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் சென்று காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

police
police

By

Published : Jan 27, 2020, 8:15 AM IST

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டதில், சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்கள் பட்டியலில் தருமபுரி நகர காவல் நிலையம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இதனை பாராட்டும் வகையில் குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரி காவல் நிலையத்திற்கு கோப்பை வழங்கினார்.

தருமபுரி நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வளாராகப் பணியாற்றி வருபவர் ரத்தினகுமார். இவர் இங்கு பொறுப்பேற்றதில் இருந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என அனைத்து வழக்குகளிலும் துரிதமாகச் செயல்பட்டு விரைவில் தீர்வு காணக்கூடிய ஒரு ஆய்வாளராகத் திகழ்ந்து வருகிறார்.

தருமபுரி காவல் நிலையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று பாராட்டு

இதனிடையே, தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு வாழ்த்து தெரிவிக்க, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு நேரில் சென்று, ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் அவருடன் பணிபுரியும் சக காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் காவல் நிலையத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் களைகட்டிய குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details