தமிழ்நாடு

tamil nadu

புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.பி. அன்பழகன்

By

Published : Feb 13, 2021, 10:00 AM IST

தர்மபுரி: பெரியகொல்லப்பட்டியில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடக்கம்
புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடக்கம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியகொல்லப்பட்டியில் புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து மொரசுபட்டி தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவும், பெல்லுஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டதையும் அவர் தொடங்கிவைத்தார்.

புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடக்கம்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது, "தமிழ்நாட்டில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கிராமப்புறங்களில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்தியாவில் மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்களை வழங்கும் திட்டம், தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தவில்லை" என்றார்.

இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்!

ABOUT THE AUTHOR

...view details