தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட்டு, 4 ஆயிரத்து 83 பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
'பாப்பா ஆ காட்டு... ' - குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றிய அமைச்சர் கே.பி. அன்பழகன் - தருமபுரி மாவட்டச் செய்திகள்
தருமபுரி: காரிமங்கலம் அருகே போலியோ சொட்டு மருந்து முகாமை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்துள்ளார்.
polio-drip-camp-in-dharmapuri
அதனொருப் பகுதியாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் காரிமங்கலத்தை அடுத்த கொண்டகரஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற சொட்டு மருந்து வழங்கும் முகாமில் கலந்துகொண்டு அதனைத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்!