அஇஅதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி. ராமச்சந்திரனின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட எம்ஜிஆரின் உருவச்சிலைகளுக்கும், அவரின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதைச் செலுத்தினர்.
தருமபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல் தலைமையில், கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.