தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(60. இவர் நாட்டுச் சர்க்கரை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பெரியசாமி இன்று (ஜூன்24) அதிகாலை லாரியில் வெள்ளம் ஏற்றிக்கொண்டு பாலக்கோடு பகுதியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, லாரி பாலக்கோடு சர்க்கரை ஆலை அருகே உள்ள கோடியூர் பகுதியில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வியாபாரி பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநரும் அவரது உதவியாளரும் லேசான காயங்களுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.