தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரியூரில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு - Dharmapuri district news

தர்மபுரி: ஏரியூரில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு
ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு

By

Published : Oct 8, 2020, 5:55 PM IST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூரில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு தலைவர் தனபால் தலைமையில் திமுக, பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதியதாக அலுவலர்களை பணி நியமனம் செய்ததற்கு ஒன்றியக் குழு உறுப்பினர்களிடம் கருத்து ஏன் கேட்கவில்லை எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

மேலும் ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாமல் 44 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் நலப் பணிகள் செய்ய நிதி ஒதுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் பாமகவைச் சேர்ந்த ஐந்து பேர், திமுகவைச் சேர்ந்த ஒருவர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர், சுயேட்சை உறுப்பினர் ஒருவர் என மொத்தம் எட்டு பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதையும் படிங்க: ஊராட்சி மன்ற ஒன்றியக் குழு கூட்டம்: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ABOUT THE AUTHOR

...view details