தருமபுரி:கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகி வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை எண்ணிக்கையோடு, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் வெற்றியைப் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவிற்காக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டி பகடி செய்துள்ளார்.