தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் மருத்துவக் கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை - தர்மபுரி நகர போலிசார்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தருமபுரியில் மருத்துவக் கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Nov 5, 2022, 10:40 PM IST

தருமபுரி: சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓட்டூனர் கண்ணன் என்பவரது மகன் இளம்பரிதி தருமபுரி அரசு மருந்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்ந்துள்ளார். 2ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில், இன்று (நவ 11) கல்லூரி விடுதியில் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டார்.

இரண்டாமாண்டு தேர்வு பாடங்களில் தேர்ச்சி பெறாத வருத்தத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தககவலறிந்த தர்மபுரி நகர போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றினர். உடற்கூராய்விற்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்காண காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details