தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது - தருமபுரி

தருமபுரி: மொரப்பூர் அருகே ஆசைவார்த்தை கூறி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய மெக்கானிக்கை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்
Dharmapuri police

By

Published : Dec 2, 2020, 11:52 AM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சார்ந்த குமரன் என்பவர் ஓசூர் பகுதியில் மெக்கானிக் வேலை செய்துவருகிறார். இவர் சொந்த ஊரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரைக் காதலித்துவந்துள்ளார்.

இந்நிலையில், மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி, கடந்த ஓராண்டாக மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளார். தற்போது மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குமரனிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் குமரன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, குமரனை மொரப்பூர் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details