தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (வயது 50). இவர் ஒகேனக்கலில் மசாஜ் மற்றும் பரிசல் ஓட்டும் பணிகளை செய்துவந்தார். மது மற்றும் சீட்டாட்ட பழக்கமுடைய இவர் நேற்று ஒகேனக்கலில் சில நபர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். சீட்டாட்டத்தின்போது, சீட்டு விளையாடிய நபர்களுக்கும் துரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், அவர்கள் நேற்றிரவு (மே.8) அவரை கொலை செய்து ஒகேனக்கல் சத்திரம் அருகேயுள்ள கோயில் வளாகத்தில் வீசி சென்றுள்ளனா். இந்நிலையில், இன்று காலை ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.