தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வெகு விமரிசையாக கொண்டாட்டம் - Durumapuri Temple Masid Festival

தருமபுரி: பாலக்கோட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா
மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா

By

Published : Mar 11, 2020, 6:28 PM IST

Updated : Mar 11, 2020, 7:36 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

பெண்கள் மாவிளக்கு தட்டு ஏந்தி சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா

பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: தீ மிதித்து நேர்த்திக்கடன்

Last Updated : Mar 11, 2020, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details