தருமபுரி:நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்குப் புகார் வந்தன. இதன் அடிப்படையில் போலி மருத்துவ ஒழிப்பு குழுவினருடன் கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் நாய்கன் கொட்டாய் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு மருத்துவமனை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் உரிமை மற்றும் ஆவணங்கள் குறித்து சோதனை மேற்கொண்டதில் மருத்துவராக இருந்த கண்ணன்(60), பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டுக் கடந்த பத்தாண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தந்தை ஹோமியோ மருத்துவம் பார்த்து வந்தபோது, அதனை உடனிருந்து கற்றுக்கொண்டு தனது தந்தை உயிரிழந்தப் பின்னர், கடந்த பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி போட்டும் மருந்து மாத்திரைகளும் வழங்கி வந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் போலீசார் கண்ணனைக் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஊசிகள் மருந்து மாத்திரைகளைக் கைப்பற்றினர்.
இவ்வாறு பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மருத்துவம் பார்த்து வந்தவரை போலீசார் கைது செய்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'டாணாக்காரன்' பட பாணியில் பழி தீர்க்கும் எஸ்.ஐ: பெண் காவலர் குமுறல்