தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற கூலித் தொழிலாளி கைது! - போக்சோ சட்டம்

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கடத்திச் சென்ற கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

arrest
arrest

By

Published : Jan 29, 2021, 8:41 PM IST

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே 15 வயது மாணவி ஒருவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் முத்து (24). இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 வயதில் குழந்தை இருக்கின்றனர்.

இவர் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்கு வந்த முத்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது வீட்டிற்குத் தெரியாமல் தான் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முத்து

தனது மகள் காணாமல்போனதை அறிந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மாணவி கோயம்புத்தூரில் முத்துவுடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின் அங்கு சென்று மாணவியை மீட்டு முத்துவை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details