தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் சொகுசு கார் திருடியவர் பெங்களூருவில் கைது - தருமபுரி மாவட்டசே செய்திகள்

தருமபுரி: காரிமங்கலம் பகுதியில் சொகுசு காரை திருடிச் சென்றவரை பெங்களூரு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Dharmapuri
Dharmapuri

By

Published : Feb 3, 2020, 7:23 PM IST

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இரவு நாகராஜ் என்பவரின் சொகுசு கார் திருடுபோனது. அதேபோல் நவம்பா் 11ஆம் தேதி காரிமங்கலம் பகுதியில் கிரைனைட் தொழில் செய்து வரும் சவுந்தர்ராஜன் என்பவரின் சொகுசு காரும் திருடுபோனது.

இச்சம்பவம் தொடர்பாக இருவரும் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காரிமங்கலம் காவல் துறையினர் கடந்த மூன்று மாதங்களாக தனிப்படை அமைத்து காரைத் தேடிவந்தனர்.

திருடப்பட்ட காரின் புகைப்படம்

இந்நிலையில், பெங்களூரு காவல் துறையினர் கார் திருட்டு வழக்கில் வினோத்குமார் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் விசாரணையில், அவர் காரிமங்கலம் பகுதியில் கார் திருடில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே, கர்நாடக காவல் துறையினர் காரிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, வினோத்குமாரை தனிப்படை காவல் துறையினர் அங்குச் சென்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் வீட்டருகே முதியவர் கொலை; போலீஸ் தீவிர விசாரணை...

ABOUT THE AUTHOR

...view details