தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து! - மதுபான பாட்டில்

தருமபுரி: அரூரை அடுத்த தீர்த்தமலை அருகே மதுபான பாட்டில்களை ஏற்றிச்சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கவிழ்ந்த லாரியில் இருந்து மதுபாட்டில்களை சேகரிக்கும் ஊழியர்கள்

By

Published : Mar 27, 2019, 2:32 PM IST

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பிலான டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான பாட்டில்களை சரக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்றிரவு தருமபுரி மாவட்டம் அரூரையடுத்த தீர்த்தமலை அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தபோது, லாரியின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் கொண்டு சென்ற மது பாட்டில்கள் சாலையில் உருண்டோடியது. விபத்தில் லாரியின் ஓட்டுநர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து மதுபாட்டில்களை சேமிக்கும் ஊழியர்கள்

இதுகுறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details