தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் 7 போ் லாரிகளில் பொருள்களை ஏற்றி சென்றுள்ளனர். பாரதப் பிரதமர் அறிவித்த இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு காரணமாக அவர்கள் ஹைதராபாத் நகரப் பகுதியிலேயே சிக்கித் தவித்துள்ளனர். ஓட்டுநர்கள் தங்கியிருந்த பகுதியில் அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் எதுவும் கிடைக்கவில்லை என ஓட்டுனர் சின்னசாமி என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஹைதரபாத்தில் சிக்கித் தவித்த லாரி ஓட்டுநர்களுக்கு உதவிய ஆளுநர்! - ஹைதரபாத்தில் சிக்கித் தவித்த லாரி ஓட்டுநர்களுக்கு உதவிய ஆளுநர்
தருமபுரி: நாடு முழுவதும் விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கினால் ஹைதரபாத் நகரில் சிக்கித் தவித்த லாரி ஓட்டுநர்களுக்கு உதவிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு லாரி ஓட்டுநர்கள் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

லாரி ஓட்டுனர் வெளியிட்ட வீடியோவில் 11 ஓட்டுநர்கள் உணவு தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு உதவ வேண்டுமென தெரிவித்திருந்தார். ஓட்டுனா்களின் துயரத்தை அறிந்த தர்மபுரி கிரீன் பார்க் பள்ளியின் உரிமையாளர் முனிரத்தினம் என்பவர் ஹைதராபாத் பகுதியில் தங்கியிருந்த ஓட்டுனா்களுக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளார். மேலம் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஆளுநர் எடுத்த நடவடிக்கை காரணமாக 11 ஓட்டுனர்களும் தங்களது சொந்த ஊருக்கு வந்துள்ளனர். லாரி ஓட்டுனர்கள் பதினோரு பேரும் கண்ணீர் மல்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் தங்களுக்கு உதவிய தனியார் பள்ளி உரிமையாளருக்கும் நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.