தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவுக்காக ஊட்டமலை அருகே புகுந்த யானை காட்டுக்குள் விரட்டியடிப்பு - ஒகேனக்கல் ஊட்ட மலை அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை

ஒகேனக்கல் ஊட்ட மலை அருகே உணவுக்காக ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத் துறையினர், பொதுமக்கள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

ஒகேனக்கல் ஊட்ட மலை அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை
ஒகேனக்கல் ஊட்ட மலை அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை

By

Published : Jan 31, 2022, 2:58 PM IST

தருமபுரி:பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் இன்று (ஜனவரி 31) காட்டு யானை ஒன்று தனியாக ஊர் பகுதியை நோக்கி வந்துள்ளது. ஒற்றை காட்டு யானை வருவதைக் கவனித்த பொதுமக்கள் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் அளித்தனர்.

வனத் துறையினர், ஊர் பொதுமக்கள் காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்பு எங்கிருந்து வந்தது என்று பார்க்கும்பொழுது, தற்பொழுது ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து படிப்படியாக குறைந்து ஆற்றில் பாறைகள் மேலே தெரிய ஆரம்பித்துள்ளது.

ஒகேனக்கல் ஊட்டமலை அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை

எனவே ஆற்றில் நீர் குறைவாக உள்ளதால் கர்நாடக வனப்பகுதியிலிருந்த காட்டு யானை உணவு தேடி கர்நாடக எல்லை மாறுகொட்டாய் பகுதியிலிருந்து தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஊட்டமலை பகுதிக்கு ஆற்றை கடந்து வந்துள்ளது.

உடனடியாக பொதுமக்கள் இதை கவனித்ததால் ஊருக்குள் யானை நுழையும் முன்பு மீண்டும் காட்டுக்கு விரட்டியடித்தனர்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைந்தகரை காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details