தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

72 ஆண்டுகளாக உழைக்கும் கழுதைகள்: கவனம் செலுத்துமா அரசு? - தருமபுரி மாவட்டச் செய்திகள்

தருமபுரி: 72 ஆண்டுகளாக  சாலை வசதியில்லாத கோட்டூர் மலை கிராமத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் கழுதைகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

dharmapuri
dharmapuri

By

Published : Dec 29, 2019, 11:17 PM IST

Updated : Dec 30, 2019, 11:24 PM IST

தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், மொரப்பூர், காரிமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் நடைபெறவுள்ள இத்தேர்தலில் மொத்தம் இரண்டாயிரத்து 209 பதவிகளுக்கு, மூன்றாயிரத்து நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் பென்னாகரம் ஒன்றியத்திற்குள்பட்ட கோட்டூர், ஏரிமலை ஆகிய இரண்டு மலைக் கிராமங்களிலும் ஆண் வாக்காளர்கள் 356 பேர், பெண் வாக்காளர்கள் 322 பேர் என மொத்தம் 678 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குப்பெட்டிகள் கழுதைகள் மூலம் அனுப்பிவைப்பு

சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் கடந்தும் இக்கிராமங்களுக்கு சாலை வசதியில்லாததால், இக்கிராம மக்கள் அத்தியாவசியப் பொருள்களைக் கழுதைகள் மூலம் ஆறு கிலோமீட்டர் தொலைவுவரை ஏற்றிச் செல்கின்றனர். அதேபோல் நடைபெறவிருக்கும் இரண்டாம்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இக்கிராமங்களுக்கு கழுதைகள் மூலம் ஏற்றிச்செல்லப்பட்டது. அவற்றுடன் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 10 வாக்குச்சாவடி அலுவலர்கள், மூன்று காவலர்களும் நடந்துசென்றனர்.

இதையும் படிங்க: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

Last Updated : Dec 30, 2019, 11:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details