தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் வேட்பாளர் கையை கடித்த பாமக வேட்பாளர்! - மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல்

தருமபுரி: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது பெண் உறுப்பினரின் கையைக் கடித்த பாமக வேட்பாளரால் பரபரப்பு நிலவியது.

மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல், local body election in dharmapuri
மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல்

By

Published : Jan 30, 2020, 8:44 PM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக சார்பில் சுமதி செங்கண்ணன் போட்டியிட்டார். பாமக சார்பில் பெருமாள் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது பாமகவைச் சேர்ந்த வேட்பாளர் பெருமாள் வாக்குச்சீட்டுகளை எடுத்து வாயில் மென்று உள்ளார்.

இதனை அறிந்த திமுக வேட்பாளரும், சக ஒன்றிய உறுப்பினர்களும் அவரிடமிருந்து வாக்குச் சீட்டை கைப்பற்ற முயற்சி செய்தனர். அப்போது பாமகவைச் சேர்ந்த பெருமாள் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் பழனியம்மாள் கையைக் கடித்துள்ளார். இதனையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பாஜக எம்.பி.யை கைது செய்ய வேண்டும்: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

அங்கிருந்த காவல் துறையினர் வாக்குச்சீட்டை வாயிலிட்ட பெருமாளை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விட்டு வெளிவந்த நிலையில், பாமகவைச் சேர்ந்த பெருமாள் மட்டும் வெளிவர முடியாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காவல்துறையினர் சிறை பிடித்து வைத்திருந்தனர்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பாமகவினர் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் மொரப்பூர் கிருஷ்ணகிரி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலின் போது ஒன்றிய குழு உறுப்பினர்களை கடத்தி வைத்துக்கொண்டு தேர்தல் நடத்தி உள்ளனர் என்றும் அவர்களை தட்டிக் கேட்காத காவல்துறை, உறுப்பினரை சிறை பிடித்து வைத்துள்ளது என்றும் உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்!

அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பாமகவினர் கலைந்துச் சென்றனர். இத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு 5 வாக்குகளும், பாமக வேட்பாளருக்கு நான்கு வாக்குகளும் கிடைத்தன ஒரு வாக்கு செல்லாத வாக்கு என்பதால் திமுக வெற்றி பெற்றது.

மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல்

ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தலில் பாமக சார்பில் பெருமாள் போட்டியிட்டார். திமுக சார்பில் ராஜலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்தார். பாமக சார்பில் போட்டியிட்ட பெருமாள், திமுக சார்பில் போட்டியிட்ட ராஜலிங்கம் ஆகிய இருவருக்கும் தலா 5 வாக்குகள் கிடைத்தன. சமஅளவு வாக்கு கிடைத்ததால் குலுக்கல் நடைபெற்றது. குலுக்கல் முறையில் பெருமாள் வெற்றி பெற்றார். மொரப்பூா் ஒன்றியத் தலைவர் பதவியை திமுகவும். துணைத்தலைவர் பதவியை திமுகாவின் எதிரணியான பாமகவும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details