தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு காலை உணவு 10:30 மணி கடந்தும் வழங்கப்படாததால், அவர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு காலை 10:45 மணிக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை அரசு அலுவலர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், தாங்கள் காலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்ததாகவும் காலை 10:30 மணியாகியும் தங்களுக்கான உணவு வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.