தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகா கலையில் சாதனை புரிந்து அசத்திய எல்.கே.ஜி சிறுமி! - தர்மபுரியில் யோகா கலையில் சாதனை புரிந்து அசத்திய எல்.கே.ஜி சிறுமி

தருமபுரி: மொரப்பூர் அருகே மழலையர் வகுப்பு பயிலும் சிறுமி, யோகா கலையில் சாதனை புரிந்து அசத்தி வருகின்றார்.

யோகா கலையில் சாதனை புரிந்த சிறுமி
யோகா கலையில் சாதனை புரிந்த சிறுமி

By

Published : Nov 30, 2019, 9:37 PM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் - அனிதா தம்பதியரின் மகள் பிரகதி ஸ்ரீ. மழலையர் வகுப்பில் பயின்று வருகிறார். இந்த சிறுமி சிறந்த முறையில் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார்.

சிறு வயதிலேயே சிறந்த முறையில் பயிர்ச்சிகளை மேற்கொண்டு, யோகா கலையில் உள்ள பல்வேறு ஆசனங்களைச் செய்து வருகிறார். பிரகதி ஸ்ரீ யோகாவில் காட்டும் ஆர்வம், பயிற்சிகளைக் கண்டு, இந்திய சாதனை புத்தகம் சார்பில் சிறுமிக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

யோகா கலையில் சாதனை புரிந்த சிறுமி

சக பள்ளி மாணவ, மாணவிகளிடம் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரகதி ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டி பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.

யோகாசனம் செய்து கொண்டே பல்வேறு நாடுகளின் கொடிகளின் வண்ணங்களைப் பார்த்து, அந்த நாடுகளின் பெயர்களைக் கூறியும் அசத்தியுள்ளார். சிறுமியின் இத்தகைய சாதனைகளைப் பள்ளி நிர்வாகமும் ஊர் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: உலக பக்கவாத தின விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details