கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 65 மதுபானக் கடைகளில் நகர்ப்பகுதியில் உள்ள 9 கடைகள் தவிர்த்து ஏனைய கடைகள் நாளை திறக்கப்பட உள்ளன.
மதுபானக் கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி தீவிரம்! - tasmac news
தருமபுரி மாவட்டத்தில் நாளை திறக்கவுள்ள மதுபானக் கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை திறக்கவுள்ள மதுபானக்கடைகளுக்கு மதுபானம் அனுப்பும் பணி தீவிரம்
முன்னதாக மதுபானக் கடைகளில் உள்ள மதுபானங்கள் தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தற்போது, அந்த மதுபானங்களை கிராமப்புறங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்'