தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமை வகித்தார்.
இந்தக் கருத்தரங்கில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இதில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண் கண்ணாடி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
20 ஆயிரத்தில் ஒருவருக்கு தொழுநோய் பாதிப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல் இந்தக் கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளில் தொழுநோய் தொடர்பாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது எனவும் அதில் 20 ஆயிரம் பேரில் ஒருவருக்குத் தொழுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதையும் படிங்க...'காவலன் SOS' செயலிக்கு காவல் துறையின் தெறிக்கவிடும் மீம்ஸ்!