சட்டமன்ற பேரவை விதி 110இன் கீழ் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர பராமரிப்பு மையம் தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தருமபுரி தோக்கம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.14 இலட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர பராமரிப்பு மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இம்மையத்தில் தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி, தசைப்பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.