தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தை மீட்டுத்தாருங்கள்: குழந்தைகளுடன் மனு - dharmapuri collector office

தருமபுரி: நிலத்தை மீட்டு தரக்கோரி கூலித்தொழிலாளி பள்ளி செல்லும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

dharmapuri
dharmapuri

By

Published : Mar 9, 2020, 9:05 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாளநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கூலி தொழிலாளி. கடந்த 30 வருடங்களாக தாளநத்தம் பகுதியில் வசித்துவருவதாகவும் தனக்கு சொந்தமாக வீடு இல்லாத காரணத்தால் 500 ரூபாய் வாடகை வீட்டில் வசித்துவருகிறார்.

இந்நிலையில், தனது பெற்றோர் வழங்கிய 4 சென்ட் நிலத்தை தனது உறவினர் மாணிக்கம் மற்றும் அவரது மகன்கள் ஆக்கிரமித்துக் கொண்டு நிலத்தை வழங்க மறுத்து அடித்து துன்புறுத்துவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதுகுறித்து மாரியப்பன் பேசும் போது, ’தனக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மூன்று பெண் குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள். குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்திவருகிறேன். எனது பெற்றோர் தனக்கு வழங்கிய 4 சென்ட் நிலத்தை உறவினர்கள் ஆக்கிரமித்து என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களிடம் உள்ள நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்த மாரியப்பன் தனது மூன்று பள்ளி செல்லும் குழந்தைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து மனு அளித்தார்.

இதையும் படிங்க: கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்: மாநில மொழிகளில் வழங்க கனிமொழி, ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details