தருமபுரியிலுள்ள பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல திரைப்பட நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் , தருமபுரி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய சுஜாதா, பெண்கள் தங்களது புகைப்படங்களை வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பதிவிடக் கூடாது என்றும், அவ்வாறு பதிவிடப்படும் புகைப்படங்கள் தவறுதலாகச் சித்தரிக்கப்பட்டு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறினார். எனவே பெண்கள் சமூக வலைதளங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.