தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும்: எல்.கே.சுதிஷ் - tamilnadu latest news

தர்மபுரி: தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ்
தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ்

By

Published : Feb 20, 2021, 3:27 PM IST

Updated : Feb 20, 2021, 4:54 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. இருப்பினும், அதிமுக - தேமுதிக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் பேட்டி

அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் அதிமுக, திமுகவிற்கு அடுத்தது தேமுதிக தான் உள்ளது. தேமுதிக உடன் கூட்டணி வைக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும்" என்றார்.

இதையும் படிங்க: தெளிவான முடிவுக்காக தேமுதிக காத்துக்கொண்டிருக்கிறது'- பிரேமலதா விஜயகாந்த்

Last Updated : Feb 20, 2021, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details