தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக தொடர்ந்து வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை..!' - கி.வீரமணி சாடல் - periyar

தருமபுரி: பாஜக தொடர்ந்து வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்பதால் மத்தியிலும், மாநிலத்திலும் மே 23ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி

By

Published : May 11, 2019, 7:53 PM IST

தருமபுரியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“சமூக நீதி கொள்கைக்கு எதிராக, பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை கொண்டு வந்தது, பாஜக ஆளும் மாநிலங்களில் மேல் சாதி ஓட்டுக்களை வாங்கவே அவசரமாக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இந்த நகல்களை எதிர் கட்சிகளுக்கு கூட தரவில்லை. பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு இல்லை என்பது சட்டத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இதே போன்ற முயற்சி நடைபெற்றது. இதற்கு எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் கைவிடப்பட்டது.

பிற்படுத்தப்போட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு இருக்கும் போட்டி என்பது திறந்த போட்டி. உயர்சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கினால், 31 விழுக்காடு என்பது 21ஆக மாறிவிடும். தமிழ்நாடு அரசு இந்த கொள்கையை எதிர்க்கிறோம் என கூறிவிட்டது. மொழியை, சமூக நீதியை காப்பாற்ற வேண்டுமெனில், இதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுத வேண்டும். இதனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் பொதுப்போட்டி பாதிக்கப்படும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீட் தேர்வை போல் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறைந்துகொண்டே இருக்கிறது. 46 இடங்களில் தவறு நடந்திருக்கிறது. 13 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்துகிறோம் என தெரிவித்தால் மக்களுக்கு பயம் இல்லை. திடீரென வாக்குப்பெட்டிகளை யாருக்கும் சொல்லாமல் எடுத்து செல்வது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போல தனியாக செயல்பட வேண்டும். ஆனால், ஆளுங்கட்சிக்கு உடந்தையாக இருக்கக்கூடாது. 46 இடங்களில் தவறு நடந்திருப்பதாக கூறிவிட்டு, 13 இடங்களில் மட்டும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீதி இடங்களில் 23ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை.

கி.வீரமணி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்பது மதச்சார்பின்மையை பின்பற்ற வேண்டுமே தவிர, மதத்தின் அடிப்படையில் செயல்படக்கூடாது. பொதுவாக கோயில் சொத்துக்களை தணிக்கை செய்வதே அறநிலையத்துறை பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, மழை வேண்டி யாகம் நடத்துவது துறையின் பணி அல்ல. இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசை, தனக்கு தோன்றியதை பேசுகிறார். அவருக்கு சட்ட அறிவு தேவை. வரலாறு படித்துவிட்டு அவர் பேச வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் 23ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். பாஜக அரசு தொடர்ந்து வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details