கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால், ஆகஸ்ட் 30ஆம் தேதி அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய இரண்டும் முழுக்கொள்ளளவை எட்டின. இதையடுத்து, கர்நாடக அரசு இரண்டு அணைகளிலிருந்தும் நீரை திறந்துவிட்டது. இதன் காரணமாக, ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்தடைந்தது.
42 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறப்பு! - கர்நாடக அணைகள்
கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால்; 42,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.
காவிரி நீர்
இந்நிலையில் தலைக்காவிரி, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், மீண்டும் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தற்போது 42 ஆயிரம் கன அடி நீரை அணைகளிலிருந்து கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.