தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராதே கிருஷ்ணா பிருந்தாவனத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் நேற்று (ஆக. 10) கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
தருமபுரியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு - ஆட்டுக்காரன்பட்டி கிருஷ்ணர் கோயில்
தருமபுரி : ஆட்டுக்காரன்பட்டி அருகே உள்ள ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது.
Krishnar jeyanthi festival
கரோனா ஊரடங்கு தடை உத்தரவின் காரணமாக குறைவான பக்தர்கள் மட்டுமே இந்தக் கோயிலில் அனுமதிக்கப்பட்டனா். இவ்விழாவில், ராதையுடன் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
பக்தர்கள் காலை முதல் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து முகக்கவங்களுடன் வந்து ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி வழிபட்டனர். கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.