தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன் வாங்க அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதா? - மறுக்கும் ஆணையாளர் - தருமபுரி நகராட்சி ஆணையாளா்

தர்மபுரி நகராட்சி ஆணையாளர், மீன் வாங்குவதற்காக அரசு வாகனத்தில் புலியூர் சென்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அரசு வாகனத்தில் மீன் வாங்க சென்ற கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளா்-வைரலாகும் வீடியோ
அரசு வாகனத்தில் மீன் வாங்க சென்ற கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளா்-வைரலாகும் வீடியோ

By

Published : Jul 6, 2022, 9:23 AM IST

தர்மபுரிநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வருபவர் சித்ரா. இவருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வாகனம் நேற்று (ஜூலை 05) கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் ஏரி பகுதியில் மீன் வாங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது.

இந்நிலையில் மீன் வாங்குவதற்கு அரசு வாகனம் பயன்படுத்தியது தவறு இல்லையா என ஆணையாளர் சித்ராவிடம் கேட்கப்பட்டது. மரக்கன்றுகள் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் இல்லாததால் கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் பகுதியில் நர்சரியில் வாங்குவதற்காக அதிகாரிகளை அனுப்பியதாகவும் அதிகாரிகள் வாகனத்தை மீன் வாங்குவதற்கு உபயோகித்தியது தவறுதான் என்றும் பதிலளித்தார்.

அரசு வாகனத்தில் மீன் வாங்க சென்ற கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளா்-வைரலாகும் வீடியோ

இதையடுத்து இந்த சம்பவம் ஆணையாளருக்கு தெரியாமல் அதிகாரிகள் பயன்படுத்தினார்களா அல்லது மீன் வாங்குவதற்கு அதிகாரிகளை ஆணையாளர் பயன்படுத்தினரா என சந்தேகம் எழுந்துள்ளது. நகராட்சியில் மரம் நடுவது என்றால் தொண்டு நிறுவனங்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாக தான் மரம் நடப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நர்சரிக்கு மரம் வாங்குவதற்கு அதிகாரிகளை அனுப்பியதாக ஆணையாளர் கூறியது உண்மையா என மக்கள் குழம்பியுள்ளனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details