தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழிவறையில் மயங்கி விழுந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மரணம் - ஊத்தங்கரை துணை வட்டார வளர்ச்சி அலுவலகம்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

dead

By

Published : Jul 24, 2019, 11:31 PM IST

தருமபுரி மாவட்டம், இன்டூரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு நவநீதம் என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை பணிக்கு வந்த சரவணன் கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட சக பணியாளர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம், அலுவலக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details