தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லியை முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் சந்தித்து தடுப்பூசி, படுக்கை வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தர்மபுரி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள் மிகவும் கால தாமதமாக வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உடனடியாக பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க வலியுறுத்தியுள்ளேன். அதிமுக ஆட்சியில் நாள் தோறும் 2,800 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 45 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: முதலிடத்தில் கோவை - விசிட்டடிக்கும் முதலமைச்சர்!