கர்நாடக மாநிலத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுக் கொள்ளளவு நிரம்பியுள்ளது. இதனால் இரண்டு அணைகளுக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 11 ஆயிரத்து 539 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 800 கன அடி நீரும் என 12 ஆயிரத்து 339 கன அடி நீர் வரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! - Cauvery river
தருமபுரி: கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணை
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று (அக்.12) தமிழ்நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க:'பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'