தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணும் பொங்கல் - திருவிழாவான ஒகேனக்கல் - kanum pongal celebration at hoganakal falls

தர்மபுரி: காணும் பொங்கலைக் கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுமார் 30 ஆயிரம் மக்களின் வருகையால் திருவிழா போல் அப்பகுதி காட்சியளித்தது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

By

Published : Jan 18, 2020, 8:34 AM IST

தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மெயின் அருவி, பரிசல் பயணம், எண்ணெய் மசாஜ் போன்ற சிறப்பு அம்சங்களும் உள்ளன.

30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான நேற்று காணும் பொங்கல் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். நேற்று மட்டும் சுமார் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திருவிழா கூட்டத்தைப் போல் அப்பகுதி நிரம்பி வழிந்தது. மக்களும் ஆர்வமாக பரிசல் சவாரி, எண்ணெய் மசாஜ், அருவியில் குளிப்பது என மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலைக் கொண்டாடினர்.

இதையும் படிங்க: காணும் பொங்கல் - களைகட்டிய மெரினா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details