அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவருமான மறைந்த எம்ஜிஆரின் 32ஆவது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக தருமபுரி மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
எம்ஜிஆர், பெரியார் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்! - எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கே பி அன்பழகன்
தருமபுரி: எம்ஜிஆர், பெரியார் ஆகியோரின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
k p anbalagan pays homage to MGR and Periyar
பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிலைக்கும் அமைச்சர் கே.பி. அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை!