தருமபுரி பூச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூவின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பூவின் வரத்து குறைவு காரணப்படும் விலையேற்றத்திற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தருமபுரியில் மல்லிகைப்பூ கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனை! - malligai poo
தருமபுரி: மலர்ச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
h
குறிப்பாக, மல்லிகைப்பூ விலை விண்ணை தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ 1,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சன்ன மல்லி கிலோ 1,400 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1,200 ரூபாய்க்கும், காக்கனா பூ கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ கிலோ 160 ரூபாய்க்கும், சாமந்தி கிலோ 100 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் கிலோ 300 ரூபாய்க்கும், ரோஸ் ஒரு கட்டு 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
பூவின் திடீர் விலையேற்றத்தால் மக்கள் குறைந்த அளவிலான பூவையே வாங்கிச் செல்கின்றனர்.