கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். மேலும் ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் உணவின்றித் தவித்து வருகின்றனர்.
இதுபோன்று உணவின்றித் தவிக்கும் ஏழை, எளியோர், வயதானவர்கள், ஆதரவற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உணவு, பண உதவிகளை செய்து வருகின்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய இஸ்லாமிய சகோதரர்கள் - Lunch for poor and humble people in Dummapuri
தருமபுரி: மொரப்பூர் பகுதியில் ஜாமியா மஜித் சார்பாக 2 ஆயிரம் ஏழை, எளியவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவு வழங்கிய ஜாமியா மஜித்