தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பாலுட்டி வகையைச் சேர்ந்த பறக்கவல்ல விலங்கான வெளவால்களுக்காக வெடி சத்தம் இல்லாமல் அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடிவருகின்றனர்.
அந்தவகையில், பாலக்கோடு அருகே உள்ள பல்லேனஅள்ளி கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள முனியப்பன் கோயிலைச் சுற்றி மிகவும் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம், புளியமரம் என ஐந்து மரங்கள் அமைந்துள்ளன. இந்த மரக்கிளைகளில் கீச்கீச் என காதுகளுக்கு இனிமையான இசை வழங்கி பல்லாயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்துவருகின்றன.
வெளவால்களைப் பாதுகாக்கும் கிராம மக்கள் இரவு நேரங்களில் இரை தேடி காட்டுக்குச் சென்று பின் விடியற்காலையில் ஓய்விற்காக இந்த மரங்களை வந்தடைகிறது. தீபாவளிப் பண்டிகை வெடிச்சத்தங்களுக்கு பஞ்சமில்லாமல் கொண்டாடப்படும் நேரத்தில் இப்பகுதி மக்கள் வெளவால்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளியைக் கொண்டாடிவருகின்றனர்.
வெளவால்கள் குடியிருக்கும் மரங்களுக்கு கீழ் உள்ள கோயிலில் திருவிழா நடந்தால்கூட வெடி வெடிப்பதில்லை. மேலும் இங்குள்ள தெய்வங்களோடு இந்த வெளவால்களையும் இணைத்து தொன்றுதொட்டு வழிபட்டுவருகின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்தக் கிராம மக்கள் வௌவால்களைப் பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை தியாகம் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க : சிறுகை அருகே குருவிகளை பாதுகாக்கும் விவசாயி...