தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி, 34 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இதற்காக, அரூர் அரசு மருத்துவமனை எதிரில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து, அரூர் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்! மக்கள் வேதனை - தண்ணீர் வீணடிப்பு
தருமபுரி: அரூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரூர்-சேலம் இணைப்புச் சாலையில், அரூர் நகரில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றுவருவதால், அதற்காக தனியார் நிறுவனம் ஒன்று சாலையில் குழி எடுத்து கேபிளை பதித்துவருகின்றனர்.அப்போது அரூர் ரவுண்டானாவில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வேகமாக வெளியேற தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாக சாலையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி, ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று அங்குள்ள சாக்கடை கால்வாயில் கலந்தது. சாலையில் தண்ணீர் வீணாக ஓடியது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.