தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் மொத்தமாக வைக்கப்பட்டிருந்தன.
பெல் நிறுவன பொறியாளர்கள் ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் முழுமையாகப் பரிசோதனை செய்து தயார்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஐந்து தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம வாய்ப்பு முறையில் தேர்வுசெய்யப்பட்டு ஒதுக்கீடுசெய்யப்பட்டன.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணியினை மாவட்டத் தேர்தல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.